யாழ்.பல்கலைக்கழகத்தில் இரு நூல்களின் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தமிழியல் கழகத்தின் ஏற்பாட்டில் தென்றலின் சிறகுகள், உணர்வெழுதும் தூரிகை ஆகிய இரு இரு கவிதைத் தொகுப்பு நூல்களின் வெளியீட்டு விழா இன்று திங்கட்கிழமை (30.03.2026) பிற்பகல்-02 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர்  கூடத்தில் இடம்பெறவுள்ளது.  

இந் நிகழ்வில் ஜப்பான் டோக்கியோ கச்சுயின் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆய்வுநிலைப் பேராசிரியை. மனோன்மணி சண்முகதாஸ் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார்.