ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தின் கொழும்பு தலைமை அலுவலகத்தில் ஒருநாள் சேவையின் மூலம் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாதவர்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம்-23, 24 மற்றும் 26 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற ஒருநாள் சேவையின் மூலம் அடையாள அட்டைகளைப் பெற முடியாதவர்களுக்கு இன்று திங்கட்கிழமை (30.03.2026) நடைபெறும் ஒருநாள் சேவையின் மூலம் தேசிய அடையாள அட்டைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, குறிப்பிட்ட விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் உரிய அலுவலகங்களுக்கு வருகை தந்து தமது அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாளை- 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் பத்தரமுல்ல தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழமை போன்று ஒருநாள் சேவை இடம்பெறும்.  

தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் சாதாரண சேவை, முன்வரிசை அலுவலகச் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம்- 06 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும்.

கணினிக் கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்ட பின்னர் அனைத்துச் சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படுமெனவும் ஆட்பதிவுத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.