சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக ஞானச்சுடர் சஞ்சிகையின் 339 ஆவது பங்குனி மாத இதழ் வெளியீட்டு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (27.03.2026) முற்பகல்-10.30 மணி முதல் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர் வ.கணேசமூர்த்தி மலரின் மதிப்பீட்டுரையையும், ஆசிரியரும், சைவப் புலவருமான நி.பாபுதரன் மலரின் மதிப்பீட்டுரையையும் நிகழ்த்துவர். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்படும்.
.png)
