மூன்று கொலைகள் செய்தவருக்கு இலங்கையில் நேர்ந்த கதி!

அம்பலாந்தோட்டை போகுடுயாய பகுதியில் மூன்று கொலைகள் செய்த நபரொருவர் வீடு புகுந்து கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (11.05.2025) இரவு நடந்துள்ளது.    

மூவர் குறித்த நபரின் வீட்டுக்குள் நுழைந்து கொலை செய்துள்ளதுடன் கொலை செய்த பின் அந் நபரின் தலை துண்டிக்கப்பட்டு மாமடல சந்தியிலுள்ள புத்தர் சிலையின் கைகளுக்கு மேல் வைத்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் குறித்த நபரின் மனைவியின் தந்தை படுகாயமடைந்துள்ளார்.  

கடந்த- 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்-02 ஆம் திகதி மாமடலை -  அலேகொடை பகுதியில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.  மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம்- 31 ஆம் திகதியே பிணையில் விடுதலையாகி வீடு திரும்பியிருந்தார்.

இதேவேளை, பழிக்குப் பழியாகவே குறித்த சம்பவம் நடந்திருக்கலாமெனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.