எழுச்சி கொள்கிறது யாழ்.நகர்: இன்று வட்டுக்கோட்டை- 50 எழுச்சி மாநாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வட்டுக்கோட்டை- 50 எழுச்சி மாநாடு இன்று சனிக்கிழமை (20.06.2026) பிற்பகல்-02 மணியளவில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலை அரங்கில் நடைபெறவுள்ளது. 

ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அரசியல், வரலாறு மற்றும் சமகால அரசியல் குறித்து இம் மாநாட்டில் விரிவாக ஆராயப்படவுள்ளது. தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலப் பாதைகள் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெறவுள்ளன. 

இந் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், சிவில்- சமூகச் செயற்பாட்டாளர்கள், கல்வியியலாளர்கள், ஆய்வாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, வட்டுக்கோட்டை– 50 எழுச்சி மாநாட்டில் பங்கேற்று வரலாற்றுப் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ளுமாறு ஈழத்தமிழர்களுக்கு வட்டுக்கோட்டை- 50 எழுச்சி மாநாடு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.