சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் இரத்ததான முகாமும் மருத்துவ முகாமும்

யாழ்.சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இரத்ததான முகாமும் மருத்துவ முகாமும் இன்று வியாழக்கிழமை (23.07.2026) காலை-09 மணி முதல் மேற்படி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறும்.

இரத்ததான முகாம் நிகழ்வில் இரத்ததானம் வழங்க விரும்பும் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும், மருத்துவ ஆலோசனை பெற விரும்புவோரையும் பங்குபற்றிப் பயன்பெறுமாறு கல்லூரி அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.