நல்லூர் சிவனுக்கு 28 ஆம் திகதி கொடியேற்றம்

  


நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் திருவெம்பாவை விரதம் ஆரம்பிக்கும் நன்னாளான எதிர்வரும்- 28 ஆம் திகதி புதன்கிழமை காலை-7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.

தொடர்ந்தும் பதினொரு தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ்வாலய மஹோற்சவம் நடைபெற உள்ளது. 

அடுத்தமாதம் 02 ஆம் திகதி திங்கட்கிழமை காலை பிட்டுத் திருவிழாவும், 03 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை கைலாசவாகன உற்சவமும், 05 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை சகோபுர உற்சவம், நடராஜர் விசேட பூசையும், திருவாதிரைத் திருநாளான 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-07 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் சனிக்கிழமை காலை-08 மணிக்குத் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் மாலை கொடியிறக்க உற்சவமும் நடைபெறும் என மேற்படி ஆலயத் தர்மகர்த்தாக்கள் தெரிவித்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)