ஊரெழு வீரகத்தி விநாயகர் கஜமுகசூர சங்காரமும், இலட்சார்ச்சனைப் பூர்த்தியும்


யாழ்.ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி ஶ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய விநாயகர் விரத உற்சவத்தின் கஜமுகசூர சங்கார உற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை(27.12.2022) மாலை-05 மணிக்கு இடம்பெறும்.

மறுநாள் புதன்கிழமை(28.12.2022) காலை-09.30 மணிக்கு விநாயகர் சஷ்டி உற்சவமும், இலட்சார்ச்சனைப் பூர்த்தி வைபவமும் இடம்பெறும். இதன்போது விநாயகப் பெருமானுக்கு விசேட அபிஷேக பூசைகள், கணபதி ஹோமம், இலட்சார்ச்சனை என்பன இடம்பெற்றுப் பஞ்சமுக விநாயகப் பெருமான் உள்வீதி, எழுந்தருளி வீதிவலம் வரும் திருக்காட்சியும் நடைபெறும்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படம்:- செ.ரவிசாந்