மேற்கு கடற்கரையை நோக்கி நகர்கிறது தாழமுக்கம்

 


இலங்கையை ஊடறுத்துச் செல்லும் தாழமுக்கம், இன்று (26) மேற்கு கடற்கரையை நோக்கி பயணிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

கிழக்கு, ஊவா, மத்திய, சபரகமுவ, மேல், தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுவதுடன் நாட்டை ஊடறுத்து 40 – 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.