சுதுமலை திருலிங்கேச்சரத்தில் நாளை திருவாசகம் முற்றோதல்


யாழ்.சுதுமலை திருலிங்கேச்சரம் மரகத வல்லித் தாயார் உடனுறை கயிலைநாதர் ஆலய வருடாந்தத் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நாளை சனிக்கிழமை(07.01.2023) இடம்பெற உள்ளது.

நாளை அதிகாலை-5.45 மணியளவில் விசேட அபிஷேகத்துடன்  ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து காலை-06 மணிக்குப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றுத் தொடர்ந்து திருவாசகம் முற்றோதல் நிகழ்வு ஆரம்பமாகி இடம்பெறும்.

திருவாசகம் முற்றோதலின் நிறைவில் பூசை நடைபெற்று அதனைத் தொடர்ந்து மதியம் அன்னதான நிகழ்வும் நடைபெறும்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)