திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறாது!நிதி உள்ளிட்ட போதிய வசதி கிடைக்கப் பெறாமையால் முன்னதாக உறுதியளித்தபடி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது எனத் தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம்-09 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் திட்டமிட்ட வகையில் தேர்தலை நடாத்துவது சாத்தியமில்லை என உயர்நீதிமன்றத்துக்குத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய தினத்தில் நடாத்த முடியாமல் போனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் வாக்களிப்பு இடம்பெறும் வரை செல்லுபடியாகும் எனத்  தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.