புன்னாலைக்கட்டுவன் கட்டுக்குள நாச்சிமார் பெருவிழா ஆரம்பம்
யாழ்.புன்னாலைக்கட்டுவன் வடக்கு அன்னை ஸ்ரீ கட்டுக்குள நாச்சிமார் கோவில்(துர்க்காதேவி) ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று திங்கட்கிழமை(20.02.2023) முற்பகல்-10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் பதினைந்து தினங்கள் பகல், இரவு உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா நடைபெற உள்ளது.

(செ.ரவிசாந்)