குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் மகா சிவராத்திரி விசேட வழிபாடு



யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் மகா சிவராத்திரி விரத நாளான நேற்றுமுன்தினம்  சனிக்கிழமை(18.02.2023) இரவு விசேட அபிஷேக, பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.



ஆச்சிரமத்தினுள் எழுந்தருளி வீற்றிருக்கும் சிவலிங்கப் பெருமானுக்கு மாலை-06 மணி தொடக்கம் இரவு-09 மணி வரை அடியவர்கள் பால், தயிர், இளநீர் முதலான அபிஷேக திரவியங்களை எடுத்து வந்து தங்கள் கரங்களால் அபிஷேகம் செய்து வழிபாடாற்றினர்.






இரவு-08 மணி முதல் இரவு-09 மணி வரை திருவாசகம், சிவபுராணம், போற்றித் திருவகவல் என்பன பண்ணுடன் பாராயணம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது. இரவு-09 மணிக்கு  விசேட அபிஷேகம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து இரவு-10 மணி முதல் ஓம் நமசிவாய எனும் திருவந்தெழுத்து மந்திரத்துடன் வில்வ அர்ச்சனையும், நள்ளிரவு-12 மணிக்கு லிங்கோற்பவ விசேட பூசை வழிபாடுகளும் நடைபெற்றன.

(செ.ரவிசாந்)