சிவனுக்கு உரிய மகா சிவராத்திரி விரத நாளான நேற்று முன்தினம் சனிக்கிழமை(18.02.2023) மாலை முதல் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் விசேட அபிஷேக, பூசை வழிபாடுகள், நான்கு சாமப் பூசைகள் என்பன இடம்பெற்றன.
சிவராத்திரி விரதப் பூர்த்தியை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நாகபூசணி அம்மன் அடியவர்கள் புடைசூழ வீதி உலா வலம் வந்து சமுத்திரத் தீர்த்தமாடினாள்.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)