புன்னாலைக்கட்டுவன் கட்டுக்குள நாச்சிமாருக்கு நாளை கொடியேற்றம்


யாழ்.புன்னாலைக்கட்டுவன் வடக்கு அன்னை ஸ்ரீ கட்டுக்குள நாச்சிமார் கோவில்(துர்க்காதேவி) ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை திங்கட்கிழமை(20.02.2023) முற்பகல்-10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

தொடர்ந்தும் பதினைந்து தினங்கள் பகல், இரவு உற்சவங்களாக இடம்பெற உள்ள இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்-28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு-07 மணிக்கு கைலாசவாகனத் திருவிழாவும், எதிர்வரும்-03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல்-12 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், அன்றையதினம் இரவு மாட்டு வண்டில் திருவிழாவும், 04 ஆம் திகதி சனிக்கிழமை இரவு-07 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-09 மணிக்குத் தேர்த் திருவிழாவும், 06 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-10 மணிக்குத் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் மாலை-04 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும் என மேற்படி ஆலய ஆதீன குரு சிவஸ்ரீ.ந.சபாரத்தினக் குருக்கள் தெரிவித்தார்.

மஹோற்சவ காலத்தில் தினமும் மதியம் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)