காரைநகரில் நாளை வருடாந்த இரத்ததான முகாம்

காரைநகர் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த இரத்ததான முகாம் நிகழ்வு நாளை திங்கட்கிழமை(20.02.2023) காலை-09.30 மணி தொடக்கம் முற்பகல்-11.30 மணி வரை மேற்படி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.