இலங்கையில் மீண்டும் சிறிய நில அதிர்வு!


புத்தல, வெல்லவாய பகுதிகளில் இன்று புதன்கிழமை(22.02.2023) முற்பகல்-11.44 மணியளவில் மீண்டும் சிறு நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளதாகப் புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இது ரிக்டர் அளவீட்டுக் கருவியில் 3.2 மெக்னிடியூட் அளவில் பதிவாகி உள்ளது.

இதுதொடர்பில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 10 ஆம் திகதி இலங்கையின் தென்கிழக்கு நகரங்களில் 3.0 மெக்னிடியூட் அளவில் சிறிய நில அதிர்வு ஒன்றும் ஏற்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.