குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் நடைபெற்ற விசேட அன்னதானம்

யாழ்.குப்பிழானைச் சேர்ந்த அனுபவம் மிக்க மூத்த பெண்மணியான திருமதி.கமலாதேவி கந்தலிங்கத்தின் 75 ஆவது ஆண்டு அகவை நாளை முன்னிட்டுக் குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் இன்று புதன்கிழமை(22.02.2023) பூசை வழிபாடுகளும், விசேட அன்னதானமும் நடைபெற்றது.

இன்று நண்பகல்-12 மணியளவில் பூசை வழிபாடுகள் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து அறுசுவையுடன் கூடிய விசேட அன்னதானமும் நடைபெற்றது. 


அரசியல் ஆய்வாளரும், மூத்த சட்டத்தரணியுமான சி.அ. யோதிலிங்கம் மற்றும் குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமப் பொறுப்பாளர் எஸ்.சிறிதரன் ஆகியோர் வாழ்த்து உரைகள் ஆற்றினர்.           

இந்த நிகழ்வுகளில் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)