கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ சிவமஹாகாளி அம்பாள் ஆலயச் சூழலில் புதிதாக அமைக்கப் பெற்ற அன்னபூரணி மண்டபம் திறப்பு விழா நாளை வியாழக்கிழமை(23.02.2023) முற்பகல்-11 மணி முதல் பிற்பகல்-12.15 மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெற உள்ளது.
மேற்படி நிகழ்வில் கல்விக் கொடையாளர் இராசையா குவேந்திரநாதன் தம்பதிகள் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மேற்படி ஆலய அறங்காவலர் அழைப்பு விடுத்துள்ளார்.