ஊரெழு வீரகத்தி விநாயகருக்கு கொடியேற்றம்: விழாக் கோலம் பூண்டது ஆலயச் சூழல்

யாழ்.ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி ஶ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய சுபகிருது வருட மஹோற்சவம் நாளை வியாழக்கிழமை(23.02.2023) காலை-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் இவ்வாலய மஹோற்சவம் சிறப்பாக இடம்பெறும்.

இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு-07.30 மணிக்கு வசந்தோற்சவமும்,  அடுத்தமாதம் 01 ஆம் திகதி இரவு-08.30 மணிக்குத் திருமஞ்ச உற்சவமும் நடைபெறும்.

அடுத்தமாதம்- 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை-05 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், 04 ஆம் திகதி சனிக்கிழமை இரவு-08.30 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-10.00 மணிக்குத் தேர்த் திருவிழாவும், 06 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-10.00 மணிக்குத் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் இரவு-07 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு ஆலயச் சூழலில் சைவசமயத்தின் அடையாளமான நந்திக் கொடிகள் பறக்கவிடப்பட்டு விழாக் கோலம் பூண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 


(செ.ரவிசாந்)