யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறையினால் நடாத்தப்படும் ஆன்மாவை அறிதல் எனும் தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கு இன்று வெள்ளிக்கிழமை(24.02.2023) இரவு-07 மணி முதல் இரவு-09 மணி வரை இடம்பெற உள்ளது.
மேற்படி கருத்தரங்கு நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலக் கற்பித்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கே.எல்.ரமணன் அறிமுக உரையையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா வாழ்த்து உரையையும், தென்னக ஞானம் பற்றிய நிறுவக ஸ்தாபகர் மற்றும் பாண்டிச்சேரி ஞானாலயப் பல்கலைக்கழக ஆராய்ச்சித் தலைவர் ஸ்ரீ பாலாஜி ராஜீ ஆய்வு உரையையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.இ.ஜெயந்திரன் நன்றி உரையையும் ஆற்றுவர்.
இந்தக் கருத்தரங்கு நிகழ்வில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் Meeting ID: 597 529 1804, Passcode: Sel78@je ஊடாக இணைந்து கொள்ள முடியும் எனவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.