யாழ்.நகரில் சனியன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்


மின்சாரம், நீர், சமையல் எரிவாயு, உணவுகளின் விலைகளை அதிகரித்து மக்களை வதைக்கும் அரசாங்கத்தை விரட்டியடிக்கவும், தேர்தலை வென்றெடுக்கவும் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டம் நாளை மறுதினம் சனிக்கிழமை(25.02.2023) முற்பகல்-11 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற உள்ளது.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செ.ரவிசாந்)