கீரிமலை மகா முத்துமாரி அம்பாள் மஹோற்சவம் ஆரம்பம்

இயற்கை எழில் சூழ்ந்த யாழ்.கீரிமலை ஸ்ரீ மகா முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் சுபகிருது வருட மஹோற்சவம் இன்று வியாழக்கிழமை (23.02.2023) முற்பகல்-11.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் 12 தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவம் சிறப்பாக இடம்பெற உள்ளது.

இவ் ஆலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-04 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சப்பரத் திருவிழாவும், 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-09.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து தேர்த் திருவிழாவும், 06 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவத் திருவிழாவும், 08 ஆம் திகதி புதன்கிழமை கப்பல் திருவிழாவும் நடைபெறும் என மேற்படி ஆலய ஆதீன கர்த்தா தெரிவித்துள்ளார். 

              


(செ.ரவிசாந்)