உடுப்பிட்டியில் நாளை இரத்ததான முகாம்


யாழ். தமிழ் Foundation அமைப்பின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை (25.02.2023) காலை-09 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை உடுப்பிட்டி உலக இரட்சகர் தேவாலயத்தில் இடம்பெற உள்ளது.

உயிர்காக்கும் உன்னத கொடையாம் இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும், இரத்ததானம் வழங்க ஆர்வமுள்ளவர்கள் 0779955987, 0769051836 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.