புண்ணிய நாச்சி அம்மையார் நினைவு விழா

யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை நடாத்தும் புண்ணிய நாச்சி அம்மையார் நினைவு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை(26.02.2023) மாலை-03 மணி முதல் யாழ்ப்ப்பாணம் சைவபரிபாலன சபை மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபைத் தலைவர் வி.ஸ்ரீசக்திவேல் தலைமையில் நடைபெறும் விழா நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் பிரதம விருந்தினராகவும், தேவார இசைமணி கலாபூசணம்.இராசையா திருஞானசம்பந்தன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ள உள்ளனர். இந்துசாதனம் வெளியீடும் நடைபெறும்.

மேற்படி விழா நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சைவத்தமிழ் அன்பர்கள், ஆதரவாளர்கள், சபை உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.