ஆரம்பமானது சுதுமலை முருகமூர்த்தி மஹோற்சவம்

யாழ்.சுதுமலை ஸ்ரீ முருகமூர்த்தி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை(26.02.2023) முற்பகல்-11 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ்வாலய மஹோற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை-05.30 மணியளவில் மாம்பழத் திருவிழாவும், 06 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-10 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள் 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-10 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், 08 ஆம் திகதி புதன்கிழமை மாலை-06 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.                    


(செ.ரவிசாந்)