கீரிமலையில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்


விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டமும் கருகம்பனைப் பொது அமைப்புக்களும் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(26.02.2023) காலை-08.30 மணி முதல் மாலை-03.30 மணி வரை யாழ்.கீரிமலை கருகம்பனை நூலகத்தில் இடம்பெற உள்ளது.

தேவையுடைய குருதிக் கொடையாளர்களுக்குப் போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக்கொடையாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.