வாதரவத்தையில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு


யாழ்.வாதரவத்தை விக்னேஸ்வர வித்தியாலயத்தில் தரம்-10 இல் கல்வி பயிலும் பொருளாதார நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த15 மாணவர்களுக்குப் பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரான தீவகம் வேலணையைச் சேர்ந்த விசுவாசம் செல்வராசாவின் நிதி ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை(23.02.2023) முற்பகல்-11 மணியளவில் மேற்படி பாடசாலை மண்டபத்தில் பாடசாலை ஆசிரியர் க.திருமாலழகன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 15 மாணவர்களுக்கு மொத்தமாக இருபதாயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.    




மேற்படி நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் கல்விப் பிரிவுப் பொறுப்பாளர் க.சசிதரன், அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம், ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)