சங்கானையில் நாளை இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

சங்கானைப் பிரதேச மருத்துவமனையின் ஏற்பாட்டில் தொற்றா நோய்களுக்கான இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நாளை செவ்வாய்க்கிழமை(28.02.2023) காலை-08 மணி முதல் யாழ்.சங்கானை மாவடி சனசமூக நிலையத்தில் இடம்பெற உள்ளது.

எனவே, மேற்படி இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நிகழ்வில் ஜே-180 கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 35 வயதுக்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு சங்கானைப் பிரதேச மருத்துவமனையின் மாவட்ட மருத்துவ அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.