நீர்வேலியில் நாளை செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு


நீர்வேலியில் அமைந்துள்ள யாழ்.அத்தியார் இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு நாளை புதன்கிழமை (01.03.2023) காலை-08.30 மணி முதல் மேற்படி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கல்லூரி முதல்வர் திருமதி.ஸ்ரீரதி முருகசோதி தலைமையில் இடம்பெற உள்ளது.

நிகழ்வில் டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவன் சுவாமிநாதன் தமிழ்ச்செல்வன் பிரதம விருந்தினராகவும், நீர்வேலி திருமுருகன் மண்டப உரிமையாளர் நடராசா சிவசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ள உள்ளனர்.

இதேவேளை, மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு யாழ்.அத்தியார் இந்துக் கல்லூரிச் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.