எதிர்வரும்-19 ஆம் திகதி நள்ளிரவு-12 மணியுடன் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நிறைவடைய உள்ளது.
இந் நிலையில் உள்ளூராட்சி மன்றங்களின் புதிய பதவிக்காலம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருடன் கலந்தாலோசித்து விரைவில் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய அனைத்து அரச சொத்துக்களையும் எதிர்வரும்-19 ஆம் திகதிக்கு முன்னர் உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.