சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பு இன்னிசை கச்சேரி

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வரும்  வாராந்த நிகழ்வுகள் வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமை(10.03.2023) முற்பகல்-10.50 மணி முதல் முற்பகல்-11.45 மணி வரை மேற்படி ஆச்சிரம மண்டபத்தில் சிறப்பு இன்னிசைக் கச்சேரி நிகழ்வு சிறப்புற இடம்பெற்றது.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்   கலாவித்தகர் கு.நக்கீரன் கலந்து கொண்டு தெய்வபக்திப் பாடல்களைப் பக்க வாத்திய சகிதம் பண்ணுடன் இசைத்தார். சுருதி வேந்தன் அ.ஜெயராமன் வயலின் இசையையும், கலாவித்தகர் க.நந்தகுமார் மிருதங்க இசையையும், கலாவித்தகர் வி.பிரபாகரசர்மா தபேலா இசையையும் வழங்கினர். 

மேற்படி நிகழ்வில் பெருமளவு சந்நிதியான் அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.(செ.ரவிசாந்)