ஏழாலையில் நாளை செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு

ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (14.03.2023) பிற்பகல்-01.30 மணி முதல் மேற்படி பாடசாலை முன்றலில் அதிபர் சி.நல்லகுமார் தலைமையில் இடம்பெற உள்ளது.

குறித்த விளையாட்டு நிகழ்வில் வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.மதியழகன் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி.ஜெ.மயில்வாகனம்  சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த விளையாட்டு நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மேற்படி பாடசாலைச் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.