தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!


நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்று வந்த நிலையில் அண்மைய காலங்களில் தங்கத்தின் விலை குறைவடைந்து வந்தது.

எனினும், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் 22 கரட் தங்கத்தின் விலை 134,000 ரூபாவாக காணப்பட்ட நிலையில் இன்றையதினம் 160,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அத்துடன் 24 கரட் தங்கத்தின் விலை இன்றையதினம் 173,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளதுடன் கடந்த வாரம் 24 கரட் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாகப் பதிவாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.