விமல் வீரவன்சவைக் கைது செய்யுமாறு உத்தரவு!


நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு இன்று திங்கட்கிழமை(13.03.2023) புதுக்கடை இலக்கம்-01 நீதவான் நீதிமன்றத்தினால் கறுவாத் தோட்டம் பொலிஸாருக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தும்முல்லையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பிலான வழக்கில் விமல் வீரவன்ச ஆஜராகாமையினால் இவ்வாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.