பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தென்மேற்குப் பசிபிக் கடலில் உள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாகப் பதிவாகி உள்ளது.

நில நடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியமையால் பொதுமக்கள் வெளியே ஓடி வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். 

இதேவேளை, சேத விபரங்கள் குறித்து உடனடியாகத் தகவல் வெளியாகவில்லை.