கொக்குவிலில் இன்று சர்வதேச பெண்கள் தின நிகழ்வு


பெண்களை ஒடுக்கும் இன்றைய பொருளாதார முறைமைக்கு எதிராக எழுவோம்!" எனும் தொனிப் பொருளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19.03.2023) மாலை-03.30 மணியளவில் யாழ்.கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

நிகழ்வில் நாடகக் கலைஞரும், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் உறுப்பினருமான ச.நித்திகா தொடக்க உரை ஆற்ற உள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்லூரிப் பணிப்பாளர் கலாநிதி. திருமதி.விஜிதா பகீரதன், சட்டத்தரணியும், சமூகச் செயற்பாட்டாளருமான திருமதி.ஆதித்தன் கார்த்திகா, சமூகச் செயற்பாட்டாளர்களான சத்தியமலர் இவீந்திரன், திருமதி.வினுசன் ரேணுகா ஆகியோர் கலந்து கொண்டு கருத்து உரைகள் நிகழ்த்துவர்.

குறித்த நிகழ்வில் சி.சிவசேகரத்தின் 'கல்லாகவே ஆனாள்' பெண் விடுதலைக் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடும், கலை நிகழ்வுகளும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் நடைபெறும்.

மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.