சுன்னாகத்தில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

காலமான நான்கு நண்பர்களின் நினைவாகச் சுன்னாகம் சிவன் கழகத்தினரும், சுன்னாகம் கதிரமலைச் சிவன் ஆலயத் தொண்டர்களும் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(19.03.2023) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-02.30 மணி வரை சுன்னாகம் கதிரமலை சிவன் ஆலய மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது.

மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.