குறைகிறது மண்ணெண்ணெய் விலை!

 

இன்று புதன்கிழமை(01.03.2023) நள்ளிரவு-12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட உள்ளதாக இலங்கை பெற்றோலியக்  கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 355 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் புதிய விலை 305 ரூபாவாகும்.

இதுவரை 464 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த தொழிற்துறைகளுக்குப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 134 ரூபாவால் குறைக்கப்பட்டு 330 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. 

எனினும், பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.