புன்னாலைக்கட்டுவனில் இன்று செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு

யாழ்.புன்னாலைக்கட்டுவன் இந்துதமிழ்க் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு இன்று புதன்கிழமை (01.03.2023) பிற்பகல்-01.15 மணி முதல் மேற்படி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் அதிபர் த.ஸ்ரீமுரளி தலைமையில் இடம்பெற உள்ளது.

நிகழ்வில் வலிகாமம் வலய ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.முரளிதரன் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் செ.தினேஸ்குமார் சிறப்பு விருந்தினராகவும், கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன சனசமூக நிலையத் தலைவர் து.சுதன் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ள உள்ளனர்.