அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி

யாழ்.அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வு நாளை புதன்கிழமை(08.03.2023) பிற்பகல்-01.35 மணியளவில் மேற்படி பாடசாலை மைதானத்தில் வித்தியாலய அதிபர் நா.இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற உள்ளது.

மேற்படி நிகழ்வில் தீவக வலய உடற்கல்வியும், சுகாதாரமும் உதவிக் கல்விப் பணிப்பாளர் பொ.சகிலன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார்.