யாழ்.இடைக்காடு மகா வித்தியாலய விளையாட்டுப் போட்டி நிகழ்வு


யாழ்.இடைக்காடு மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வு நாளை புதன்கிழமை(08.03.2023) பிற்பகல்-01.30 மணியளவில் மேற்படி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய அதிபர் கு.அகிலன் தலைமையில் இடம்பெற உள்ளது.

மேற்படி நிகழ்வில் வடக்கு மாகாண உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் இ.இராஜசீலன் பிரதம விருந்தினராகவும், யாழ்.இடைக்காடு மகா வித்தியாலயத்தின் ஓய்வுநிலை அதிபர் கு.வாகீசன் சிறப்பு விருந்தினராகவும், எழுத்தாளரும், பழைய மாணவருமான செ.கிருஷ்ணமூர்த்தி கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ள உள்ளனர்.

குறித்த விளையாட்டு நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலைச் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.