இணுவில் மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

யாழ்.இணுவில் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(07.03.2023) பிற்பகல்-01 மணி முதல் இணுவில் கந்தசுவாமி கோவிலடியில் அமைந்துள்ள மேற்படி கல்லூரியின் மைதானத்தில் அதிபர் இ.துரைசிங்கம் தலைமையில் இடம்பெற உள்ளது.

மேற்படி நிகழ்வில் வலிகாமம் வலயக் கல்வி அபிவிருத்திப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ஜமுனா இராஜசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

குறித்த விளையாட்டு நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இணுவில் மத்திய கல்லூரிச் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.