மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு!


அடுத்த மாதம் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் எரிபொருள் விலை கணிசமான அளவு குறைக்கப்படும் எனவும், டிசம்பர் மாதம் மின் கட்டணத்துக்கும் நிவாரணம் வழங்கப்படும் எனவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

இன்று செவ்வாய்க்கிழமை(21.03.2023) நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.   

மசகு எண்ணெய் விலை குறைந்து, ரூபாவின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது. எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ஏற்கனவே எனக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.