மயிலணிச் சிவன் ஆலயத்தில் நாளை யம சங்கார உற்சவம்

'மயிலணிச் சிவன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி திருக்குடவாயில் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்தில் நாளை புதன்கிழமை(22.03.2023) யம சங்கார உற்சவம் நடைபெற உள்ளது.

நாளை மாலை-04 மணிக்கு விசேட பூசை ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து மார்க்கண்டேயர் சிவபூசை செய்யும் நிகழ்வும், மங்கள வாத்தியங்கள் முழங்க விஸ்வநாத சுவாமி வீதி உலா வந்து காலனைச் சங்காரம் செய்து அடியவர்களுக்கு அருள் பாலிப்பார்.