யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை(03.03.2023) பிற்பகல்-01 மணியளவில் கல்லூரி மைதானத்தில் இடம்பெறும்.

நிகழ்வில் ஐக்கிய இராச்சியத் தமிழ் துடுப்பாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்க விளையாட்டுத்துறைச் செயலருமான து.பிரபாகரன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

மேற்படி இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கல்லூரிச் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.