குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் நாளை அன்னதானம்

யாழ்.குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் நாளை வெள்ளிக்கிழமை(03.03.2023) முற்பகல்-10.30 மணியளவில் விசேட அபிஷேக ஆராதனைகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து பூசைகள் இடம்பெறும். 

தொடர்ந்து நண்பகல்-12 மணியளவில் மகேஸ்வர பூசையும்(அன்னதானம்) இடம்பெறும் எனவும்,  பூசை வழிபாடுகளிலும் அன்னதான நிகழ்விலும்  அனைத்து அடியவர்களையும் கலந்து கொள்ளுமாறும் மேற்படி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ.சி.கிருஷ்ணசாமிக் குருக்கள் தெரிவித்துள்ளார். 

(செ.ரவிசாந்)