சுண்டுக்குளியில் நாளை இரத்ததான முகாம் நிகழ்வு

யாழ்.மாவட்டத் திரிசாரணர் குழாமின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை(25.03.2023) காலை-09 மணி முதல் பிற்பகல்-2 மணி வரை யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள கிறீன் பீல்ட் சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும் தவறாது கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.