தெல்லிநகர் துர்க்காதேவியின் இலட்சார்ச்சனைப் பூர்த்தி வைபவம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய வருடாந்த இலட்சார்ச்சனை உற்சவத்தின் பூர்த்தி வைபவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(05.03.2023) மாலை-03 மணியளவில் விசேட அபிஷேகம், பூசைகளுடன் ஆரம்பமாகி நடைபெறும்.

இவ் ஆலய வருடாந்த இலட்சார்ச்சனை உற்சவம் கடந்த மாதம்-24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகித் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.             

(செ.ரவிசாந்)