யாழ்.கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ சிவ மஹாகாளி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் பஞ்சரத பவனி நாளை ஞாயிற்றுக்கிழமை(05.03.2023) காலை-09.30 மணியளவில் சிறப்பாக இடம்பெற உள்ளது.
இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழாவில் இன்று சனிக்கிழமை (04.03.2023) இரவு சப்பரத் திருவிழா இடம்பெற உள்ளதுடன் நாளை மறுதினம் திங்கட்கிழமை(06.03.2023) காலை-10 மணியளவில் தீர்த்தோற்சவமும், இரவு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும் என மேற்படி ஆலய அறங்காவலர் தெரிவித்துள்ளார்.